‘ரெட்ரோ’ படத்திற்கு பிறகு சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதை முடித்துவிட்டு வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் நடிக்க தேதிகள் கொடுத்துள்ளார். இதனை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளது. இப்போது படப்பிடிப்பிற்கு முன்பே இசை வேலைகளை முடிக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கு வெங்கி அட்லூரி மற்றும் ஜி.வி. பிரகாஷ் துபாய் சென்றுள்ளார். அங்கு பாடல் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளனர். சில காட்சிகளுக்கான பின்னணி இசையையும் முடிவு செய்யப் போகிறார்கள். வெங்கி அட்லூரி இயக்கும் படம் என்பதால் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். அந்தளவிற்கு இருவரும் நெருங்கிய நண்பர்கள். அந்த நட்பு சூர்யாவின் படத்திலும் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.