சென்னை : காமெடி நடிகை பிந்து கோஷின் இறுதி நாள்கள் வறுமையில் கழிந்துள்ளன என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தும் விஷயம் ஆகும்.
1980களில் கொடி கட்டி பறந்த காமெடி நடிகையான பிந்து கோஷ், இறுதி நாள்களில் வீட்டு வாடகை கொடுக்கக் கூட பணம் இல்லாமல் உயிரிழந்திருக்கிறார். அந்த காலத்திலேயே சென்னை தசரதபுரத்தில் பங்களா வீடு வைத்திருந்த அவர், 10 நாய்கள் வளர்த்திருக்கிறார்.
ஆனால், வயிற்றில் 13 கிலோ சதையை அகற்ற அறுவை சிகிச்சை செய்ததால், உடல் நலன் குன்றி சிகிச்சையிலேயே மொத்த சொத்தையும் இழந்து வறுமையில் இறந்திருக்கிறார்.
கடந்து ஒரு வாரத்திற்கு முன்பு கே பி ஒய் புகழ் பாலா நடிகை பிந்து கோஷின் மருத்துவ செலவுகளுக்காக பண உதவியும் மேலும் எந்த உதவியும் வேண்டுமானாலும் நான் செய்கிறேன் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.