யாஷ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘த டாக்ஸிக்’. கீது மோகன்தாஸ் இயக்கும் இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி மற்றும் பலர் நடிக்கின்றனர். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் தயாராகும் இந்தப் படம், இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் பிற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும்.
ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் ஜே.ஜே. பெர்ரி ஆக்ஷனை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் 45 நாட்கள் நடந்தது.

இந்த ஆக்ஷன் காட்சிகள் இந்திய சினிமாவுக்கு ஒரு புதுமையாக இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில், மும்பையில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இந்த மாத இறுதிக்குள் பெங்களூருவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அதனுடன் படப்பிடிப்பு முடிவடையும்.