ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘சிகிட்டு’, இன்று வெளியாகி ரசிகர்களிடையே எதிர்வினைகளை பெற்றுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடலில், நடிகர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டுள்ளார் என்பது ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

முந்தைய ப்ரோமோக்களில் அனிருத், சாண்டி, மற்றும் டி.ராஜேந்தர் ஒரே ஃபிரேமில் தோன்றிய காட்சிகள் மிகவும் வைரலானது. குறிப்பாக டி.ராஜேந்தர் இந்த பாடலை முழுமையாக பாடுவார் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் வெளியாகியுள்ள பாடலில் அவர் சிறு ஹம்மிங் மட்டுமே செய்திருக்கிறார் என்பது சிலருக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
பாடலின் வைப், இசை, டான்ஸ் எலெமெண்ட்கள் அனைத்தும் செம எனர்ஜியோடு அமைந்துள்ளதால், பெரும்பாலான ரசிகர்கள் பாடலை லூப் மோடில் கேட்டு ரசித்து வருகின்றனர். அனிருத் எப்போதும் போல் இசையிலும் பாடலிலும் தன்னுடைய முழு யுக்தியை வெளிப்படுத்தியுள்ளார். பாடலின் வீடியோவில் ரஜினியின் ஸ்டைலிஷ் ஆட்டங்கள் சிலருக்கு குறைவாக தோன்றினாலும், அதனை திரையரங்கில் முழுமையாக பார்ப்பதே சுவாரஸ்யம் என்பதால் தயாரிப்பாளர்கள் சிக்கனமாக காட்சிகளை கையாள்ந்திருக்கின்றனர்.
டி.ராஜேந்தர் ரசிகர்கள் கூறுவது போல, அவரை பாடலின் ஒரு பகுதியில் பாடச் செய்திருக்கலாம் என்கிறார்கள். இது அவருடைய ரஜினி படத்தில் முதல் பாடல் என்பதாலும் அவரிடம் இருந்து இன்னும் அதிகமாக எதிர்பார்த்தனர். எனினும், வெறும் ஹம்மிங்காக இருந்தாலும் அதிலேயே அவருடைய வைப் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஒட்டுமொத்தமாக, ‘சிகிட்டு’ பாடல் ஹை எனர்ஜியுடன், ரஜினியின் ஸ்டைலுக்கு தகுந்த ஒரு ஸ்பெஷல் ட்ரெட்மெண்ட். டி.ராஜேந்தரின் முழு பங்கு இல்லாதது சிறு குறையாக இருந்தாலும், பாடல் கலக்கல் என்பதை ரசிகர்கள் ஏற்கின்றனர்.