ஹைதராபாத்: படம் தோல்வியடைந்தால் தயாரிப்பாளரை நஷ்டத்தில் தள்ளிவிட்டு தப்பிக்கும் ஹீரோக்களில் தெலுங்கு நடிகர் சித்து ஜொன்னலகடா தனித்துவமானவர். சித்து ஜொன்னலகடா ‘குண்டூர் டாக்கீஸ்’, ‘டிஜே தில்லு’, ‘தில்லு ஸ்கொயர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவரது சமீபத்திய படம் ‘ஜேக்’.

இந்தப் படம் கடந்த மாதம் வெளியாகி பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளர்களுக்கு அவர் பெற்ற சம்பளத்தில் இருந்து ரூ.4.75 கோடியை சித்து திருப்பிக் கொடுத்துள்ளார். ‘சித்துவின் சம்பளம் அவரது மார்க்கெட்டின் படி ரூ.10 கோடி. அதில், தயாரிப்பாளர்களிடம் கேட்காமலேயே 4.75 கோடியை திருப்பிக் கொடுத்துள்ளார்’ என்று திரைப்பட வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தத் தகவலை அறிந்த பல ரசிகர்கள் சித்துவைப் பாராட்டி வருகின்றனர்.