நடிகை ஹன்சிகா தொழிலதிபர் சோஹைல் கத்தூரியாவை காதலித்து 2022-ல் திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகாவின் திருமணமான சில நாட்களுக்குள், அவரது சகோதரர் பிரசாந்த் மோத்வானி மற்றும் அவரது மனைவி முஸ்கன் நான்சி ஜேம்ஸ் ஆகியோருக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டது.
இதன் காரணமாக, பிரசாந்த் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். இருவரும் தனித்தனியாக வசித்து வந்த நிலையில், முஸ்கன் தனது கணவர் பிரசாந்த், ஹன்சிகா மற்றும் அவரது தாயார் மோனா ஆகியோர் தன்னை சித்திரவதை செய்ததாக கூறி 2024 இல் மும்பையின் அம்பாலி போலீசில் குடும்ப வன்முறை புகார் அளித்தார். மூவரும் தன்னிடம் பணம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளை கோருவதாகவும், தனது கணவருடன் வாழ விரும்பினாலும், ஹன்சிகாவும் அவரது தாயாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதைத் தொடர்ந்து, ஹன்சிகா மற்றும் மற்றவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஹன்சிகா மற்றும் பிறருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. விளம்பரம் இதைத் தொடர்ந்து, தன் மீது பதிவு செய்யப்பட்ட குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்யக் கோரி ஹன்சிகா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விசாரணையைத் தொடரவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் போலீசார் அவரை விசாரிக்க உள்ளனர்.