மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘தடக் 2’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ‘தடக் 2’ படத்தை இயக்குநர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் சித்தாந்த் சதுர்வேதி மற்றும் திரிப்தி திம்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமான ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் ரீமேக் ஆகும்.
இந்த படத்தின் முதல் பாகம் நாகராஜ் மஞ்சுளே இயக்கிய மராத்தி படத்தின் ‘சாய்ராட்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் தர்மா புரொடக்ஷன்ஸ்தான் தயாரித்தது. ஷாஜியா இக்பால் இயக்கிய ‘தடக் 2’ ஜாதி தொடர்பான உரையாடல்களால் சென்சார் சிக்கலை எதிர்கொண்டது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு நவம்பரில் வெளியாகவிருந்த படம், பின்னர் மார்ச் 2025-க்கு ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் தாமதமானது.

இந்த சூழ்நிலையில், படத்தில் உள்ள 16 சாதி தொடர்பான வசனங்கள் சென்சார் வாரியத்தால் தணிக்கை செய்யப்பட்டு, படத்திற்கு U/A 16+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, படம் ஆகஸ்ட் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது.