‘மதராசி’ என்பது சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய படம். இந்தப் படம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டாலும், பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. உலகளவில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது. இதை லட்சுமி மூவிஸ் தயாரித்து வெளியிட்டது.
‘மதராசி’ படம் அக்டோபர் 1-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மட்டுமல்ல அனைத்து மொழிகளிலும் வெளியாகும். படத்தின் சண்டைக் காட்சிகளில் சிவகார்த்திகேயனின் நடிப்பு பேசப்பட்டது. இந்தப் படம் ஏ.ஆர். முருகதாஸின் சமீபத்திய படங்களில் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

சிவகார்த்திகேயனுடன் வித்யூத் ஜாம்வால், விக்ராந்த், ருக்மணி வசந்த், பிஜு மேனன், ஷபீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றினார்.
‘மதராசி’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.