ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில் வைபவின் தங்கையாக நடித்த இந்துஜா, அதன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி, விஜய்யுடன் பிகில் போன்ற படங்களில் நடித்த இவர் நல்ல பாராட்டுகளை பெற்றார்.

தனுஷுடன் நடித்த நானே வருவேன் படம் விமர்சன ரீதியாக பாராட்டுதல்களைக் பெற்றாலும், வசூலில் பெரிய வெற்றி பெறவில்லை. இதனையடுத்து, முன்னணி இயக்குநர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்துஜா படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சமீப காலமாக அவர் உடல் எடையால் விமர்சனம் சந்தித்திருந்த நிலையில், தற்போது ஒல்லியான தோற்றத்தில் வெளியாகியுள்ள அவரது புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும், தற்போது கிளாமர் லுக்கில் தன்னை மாற்றிக் கொண்ட இந்துஜா, அந்த சாட்டையை சரியாகப் பிடித்து முன்னேற முயல்கிறார். இணையத்தில் வைரலாகும் அவரது புகைப்படங்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.