சென்னை: ரைனோஸ் ராம்பேஜ் பிலிம்ஸ் சார்பில் காலெப் மற்றும் கெல்வின் தயாரிப்பில் சிதம்பரம் ஏ.அன்பழகன் இயக்கத்தில் பாலாஜி முருகதாஸ் நடிக்கும் அடுத்த படம் ‘ரன்னர்’. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சிம்பு வெளியிட்டார். ஸ்பீடு ரன்னர்களைப் பற்றிய நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
துரை ராஜேஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, தர்ஷன் ரவிக்குமார் இசையமைக்கிறார். டி.எம்.திலீப்குமார் படத்தொகுப்பு செய்ய, ஏ.ராஜா அரங்கம் அமைக்கிறார். ஓம் பிரகாஷ் சண்டை பயிற்சி அளிப்பார். படம் குறித்து சிதம்பரம் ஏ.அன்பழகன் கூறும்போது, ’கடந்த 6 மாதங்களாக பாலாஜி முருகதாஸ் தான் ஏற்று நடித்த கேரக்டருக்காக சர்வதேச, தேசிய அளவிலான பயிற்சியாளர்களிடம் தீவிர வேக ஓட்டப் பயிற்சி எடுத்து வருகிறார். மதியம் 3 மணிக்கு உடற்பயிற்சி செய்துவிட்டு காலை 5.30 மணிக்கு தடகளப் பயிற்சி மேற்கொள்கிறார்.