சென்னை : அட்லீ, அல்லு அர்ஜுனை வைத்து தற்போது சன் பிக்சர்ஸ் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை இயக்கிய அட்லீக்கு பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். அடுத்து மீண்டும் தென்னிந்தியாவில் அட்லீ படம் பண்ணலாம் என முடிவெடுத்த நிலையில், விஜய் படம் தான் பண்ணுவார் என எதிர்பார்க்கப்படது.
ஆனால், விஜய் அதற்குள் அரசியலில் ஆர்வம் செலுத்த, அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ தனது 6வது படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். புஷ்பா 2 படத்துக்குப் பிறகு பேன் வேர்ல்ட் நடிகராகவே மாறிய அல்லு அர்ஜுனை வைத்து ரியல் பேன் வேர்ல்ட் படத்தைக் கொடுக்க முடிவெடுத்துவிட்டார் அட்லீ.
பிளாக் பாந்தர், அவதார் உள்ளிட்ட படங்களுக்கு பணியாற்றிய நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ள வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். பீஸ்ட் படத்துக்கு எப்படி சன் பிக்சர்ஸ் பேனரில் விஜய், நெல்சன், கலாநிதி மாறனை வைத்து வீடியோ வெளியானதோ அதே போல அட்லீ, அல்லு அர்ஜுனை வைத்து தற்போது சன் பிக்சர்ஸ் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் படத்திற்கு இளம் விஜய்யை டீ ஏஜிங் செய்யவும் இந்த ஹாலிவுட் நிறுவனத்தில் தான் கரம் கோர்த்தனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். எந்திரன், 2.0 படங்களுக்குப் பிறகு ஷங்கர் இப்படி மீண்டும் பிரம்மாண்ட படம் பண்ணியிருக்க வேண்டும் என்றும் அல்லு அர்ஜுனுக்கு பதில் இந்நேரம் விஜய் அங்கிருந்தால் வேற லெவலில் இருந்திருக்கும் என்கின்றனர்.