நடிகை த்ரிஷா தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்திலும், அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடித்து 2005-ல் வெளியான படம் வித்தியாசமான சாதனையை படைத்துள்ளது. தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்த படம் ‘அத்தடு’.

த்ரி விக்ரம் நிவாஸ் இயக்கிய இந்தப் படம், பஞ்ச் வசனங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுடன் கமர்ஷியல் கதையாக வெளிவந்தது. இந்தப் படம் ஸ்டார் மா சேனலில் இதுவரை 1500 முறை ஒளிபரப்பாகி சாதனை படைத்துள்ளது. வேறு எந்தப் படமும் உலகம் முழுவதும் இத்தனை முறை ஒளிபரப்பப்பட்டதில்லை என்கிறார்கள். தமிழில் ‘நந்து’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.