சென்னை: வடிவேலு, ஃபஹத் ஃபாசிலுடன் பைக்கில் வரும். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ படம் வடிவேலுவின் நகைச்சுவை முகத்தையே மாற்றியது. அதையடுத்து, ‘மாரீசன்’ படத்திலும் வடிவேலு அப்படியொரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தின் போஸ்டர்கள் அதை உறுதிப்படுத்துகின்றன. ஃபஹத் பாசில் – வடிவேல் நடித்துள்ள இந்தப் படத்தை ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின் 98-வது படமாக இப்படம் உருவாகிறது. படத்தை சுதிஷ் ஷங்கர் இயக்குகிறார். 2009-ல் வெளியான ‘ஆறு மனமே’ படத்தை இயக்கிய இவர், 2014ல் மலையாளத்தில் திலீப் நடித்த ‘வில்லாலி வீரன்’ படத்தை இயக்கினார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு ஃபஹத் ஃபாசில் பின்னால் வடிவேலு பைக்கில் அமர்ந்து செல்லும் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.