பாலகிருஷ்ணா நடித்த ‘டாக்கு மகாராஜ்’ ஜனவரி 12-ம் தேதி வெளியானது. படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் தயாரிப்பாளர் நாக வம்சி சில பேட்டிகளில் மறுத்திருந்தார். மேலும், படத்தின் வெற்றியும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இதனிடையே, ‘டாக்கு மகாராஜ்’ படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்று தயாரிப்பாளர் நாக வம்சி ‘மேட் ஸ்கெயர்’ பட விழாவில் கூறினார்.
‘டாக்கு மகாராஜ்’ படம் குறித்து அவரிடம் கேட்டபோது, “சங்கராந்திக்கு வஸ்துணாம்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றதால், அந்தப் படத்தின் தாக்கம் அதிகரித்து, முக்கியத்துவம் பெற்றது. ‘டாக்கு மகாராஜ்’ படம் எதிர்பார்த்த வசூலை தியேட்டர்களில் பெறாதது வருத்தம்தான். பாலகிருஷ்ணாவின் வலுவான ஏரியாக்களில் படம் நல்ல வசூலைப் பெற்றது. தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் வெங்கடேஷ் இருவரும் ‘சங்கராந்திக்கு வஸ்துணாம்’ படத்தின் மூலம் பெரும் வெற்றியைப் பெற்றனர்.
அதே சமயம் ‘டாக்கு மகாராஜ்’ படத்துக்கு கிடைத்த வரவேற்பில் மகிழ்ச்சி. ஆனால், திரையரங்குகளில் இன்னும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கலாம்,” என்றார். பாபி கோஹ்லி இயக்கத்தில் பாலகிருஷ்ணா, பாபி தியோல், பிரக்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘டாக்கு மகாராஜ்’. நாக வம்சி தயாரித்த இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார். இப்படம் பிப்ரவரி 9 ஆம் தேதி அனைத்து மொழிகளிலும் Netflix OTT தளத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.