சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படும் பெயர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட செய்தி தான் பல இடங்களில் தலைப்பாக இடம்பெற்று வருகிறது. ஒரு காலத்தில் இவர் வெற்றிப்படங்களை அள்ளிக்கொடுத்து, தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். ஸ்ரீகாந்தின் ஆரம்ப வெற்றியை ரோஜா கூட்டம் திரைப்படம் வெற்றிநடை போட்டது. அந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஹிட்டாகின.

இதன் பின்னர் ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, போஸ், பூ, உயிர் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தார். நடிகை சினேகாவுடன் நடித்த பல படங்களில் இவர்களுக்குள் இருந்த கெமிஸ்ட்ரி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஒருபோதும் தவறான வழிக்கு செல்லமாட்டார் என நினைக்கப்பட்டவர் ஸ்ரீகாந்த்.
ஆனால், அதன்பின் இவரது சினிமா பயணம் இறங்குமுகம் கண்டது. ஜுட் படம் பெரிய தோல்வியடைந்தது. தொடர்ந்து வந்த படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பல ஆண்டுகள் திரையிலிருந்து ஒதுங்கிய பிறகு பூ படத்தில் மீண்டும் திரும்பினார். நண்பன் படத்தில் மூன்றாவது ஹீரோவாக நடித்த போதும், அதனால் அவருக்கான நிலைமை மாறவில்லை.
தினசரி என்ற படத்தில் ஹீரோவாக மீண்டும் நடித்தார். ஆனால் அந்த படத்தின் போஸ்டர் வெளியாகியவுடன் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் குவிந்தன. அவருக்கு கிடைத்த அந்த நிலைமையை பார்த்து ரசிகர்கள் வருத்தப்பட்டனர். தற்போது போதை பழக்கத்தால் நீதிமன்றத்தில் “தவறு செய்துவிட்டேன்” என கதறும் நிலைக்கு வந்திருக்கிறார்.
பிஸ்மி தெரிவித்தபடி, தவறான நட்பு மற்றும் பழக்கங்களே இதற்கு காரணம். சரியான கவனமும், தெளிவான முடிவுகளும் இல்லாமல் நடிகராக இருந்த உயரத்தை இழந்துள்ளார். தற்போது இந்த நிலையை பார்த்து ரசிகர்களும் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர்.