இந்திய சினிமாவின் ஒளிமிக்க நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளித்திரையை ஆட்சி செய்து வரும் இவர், இன்னும் எப்போதும் போலவே சுறுசுறுப்பாகவும், உற்சாகத்துடனும், வசூல் மன்னராகவும் திகழ்கிறார். 74 வயதிலும் எதையும் வெல்லும் உறுதியுடன் இருக்கும் ரஜினி, தனது அன்றாட வாழ்வில் உடற்பயிற்சி, யோகா, சீரான உணவுமுறை, ஆன்மீக பயணம் ஆகியவற்றை முக்கியமாக பின்பற்றி வருகிறார்.

கூலி திரைப்படத்தில் “தேவா” என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் மாபெரும் வரவேற்பைப் பெற்றார். முதல் நாளிலேயே ரூ.152 கோடி வசூல் செய்த படம், முதல் நான்கு நாட்களில் ரூ.404 கோடி வரை சென்று, வசூல் சாதனையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், ரஜினியின் பார்வையில் இவை எல்லாம் வழக்கமானதுதான் – அந்த மன நிலைக்கும் காரணம் அவரது ஒழுக்கமான வாழ்வுமுறை தான்.
ராஜினிகாந்த் தனது உணவில் மிகவும் கட்டுப்பாடு பின்பற்றுகிறார். 2014ம் ஆண்டுக்குப் பிறகு முழுமையாக சைவ உணவுக்கு மாறியவர், பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள் மற்றும் இயற்கையான உணவுகளை மட்டுமே தேர்வு செய்கிறார். பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், சோகரமான பழக்கவழக்கங்கள் எல்லாம் அவருக்கே தெரியாதவை. இது மட்டுமல்ல, ஒவ்வொரு திரைப்படத்தின் பின்னணியிலும், ரீசார்ஜ் ஆக இமயமலைக்கும் பயணம் செய்வது அவரது வழக்கம்.
ரஜினிகாந்த் தியானம் மற்றும் யோகாவை கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருவதாகவும், இது தான் அவருக்குத் தரும் மன அமைதியும் ஆற்றலும்தான் அவரை இன்னும் இளமையாக வைத்திருக்கிறது எனவும் கூறியிருக்கிறார். திரையுலக அழுத்தங்கள் கூட அவரை தளர வைக்க முடியாத காரணமே இந்த வாழ்க்கை முறைதான்.