மோகன் லால், பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லூசிபர் 2’ படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது. 2019-இல் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற ‘லூசிபர்’ படத்தின் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் ஆகும் இந்த படம். முதல் பாகம் 175 கோடிகள் வசூலித்ததுடன், படத்தின் க்ளைமேக்ஸில் இரண்டாம் பாகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இரண்டாம் பாகத்திற்கு ‘எம்பூரான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது, மற்றும் இந்த படத்திலும், முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் மீண்டும் இணைந்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதோடு, ‘லூசிபர் 2’ 2025 மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் ‘காட்ஃபாதர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தில், சிரஞ்சீவி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.