சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து படம் தயாரிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூர்யா இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பாளராக ஷபிக் முகமது அலி, ஸ்டண்ட் இயக்கத்தில் கேச்சா கம்பக்டே, ஆடை வடிவமைப்பாளராக பிரவீன் ராஜா ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.
.
உறியடி விஜயகுமார் வில்லனாக நடிக்கப் போவதாக கூறப்பட்டது. மேலும் ஜோஜு ஜார்ஜ், நவீன் சந்திரா, தனகரன் தமிழ், நாராயணன் ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜின் மற்ற படங்களைப் போலவே இந்தப் படமும் கேங்ஸ்டர் கதை என்று கூறப்படுகிறது. பீரியட் படமாக உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் இப்படத்தின் கிளிப் வீடியோ வெளியாகி கவனம் பெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் மீண்டும் தொடங்கியுள்ளது. அங்கு முக்கிய காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.