மும்பை: இந்திய திரையுலகில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் ‘ராமாயணம்’.
நிதேஷ் திவாரி இயக்கிய இப்படத்தில் ரன்பீர் கபூர், யாஷ், சன்னி தியோல், சாய் பல்லவி, நமித் மல்கோத்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது.
தற்போது முதல் பாகத்தில் ரன்பீர் கபூர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.
மேலும், ராமராக ரன்பீர் கபூர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விளம்பரம் இந்து தமிழ்10 செப்டம்பர் ராவணனாக நடிக்கும் யாஷின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளது.
தனது காட்சிகளை ஒரே கட்டமாக முடிக்கவும் திட்டமிட்டுள்ளார். சன்னி தியோல் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு அடுத்த கோடையில் தொடங்கவுள்ளது. இந்தப் படத்தில் அவர் அனுமன் வேடத்தில் நடிக்கவுள்ளார்.
ரன்பீர் கபூர், சன்னி தியோல் மற்றும் யாஷ் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர். முதல் பாகத்திற்கான அனைத்து கிராபிக்ஸ் வேலைகளையும் முடித்துள்ள படக்குழு, முதல் பாகத்தை 2026-ல் திரைக்கு கொண்டு வர தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.