இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அனிமல். இந்த மாபெரும் வெற்றி பெற்ற அனிமல் திரைப்படம் அதன் பெண்ணடிமைத் தனத்தை விதைப்பதாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் இந்தப் படம் 900 கோடி ரூபாய் வசூலித்தது.
இவர் இயக்கிய அர்ஜுன் ரெட்டி படத்தின் மீதும் இந்த விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவரது படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றதால், முன்னணி நடிகர்கள் அவரது இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளனர். இவர் அடுத்ததாக பிரபாஸின் 25வது படமான ஸ்பிரிட்டை இயக்கவுள்ளார்.
இந்தப் படம் குறித்து சமீபத்தில் அவர் பேசுகையில், “300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது ஸ்பிரிட். படம் முதல் நாளில் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யும். இந்தப் படத்தில் பிரபாஸ் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். திரைக்கதையின் பெரும்பகுதி பணிகள் நிறைவடைந்துள்ளன,” என்றார்.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இந்த படத்தில் வில்லனாக தென்கொரிய பிரபல நடிகர் மா டாங் சியோக் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இவர் பல அதிரடி படங்களில் நடித்து உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியான பிரபாஸ், தென் கொரியாவைச் சேர்ந்த கொடூரமான கேங்ஸ்டரான வில்லனைத் தேடுவதாகக் கூறப்படுகிறது.