தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அவர்களின் கோரிக்கையை நிராகரித்தது. இதன் விளைவாக, படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், தொழிலாளர் கூட்டமைப்பு 22.5 சதவீத ஊதிய உயர்வுக்கு ஒப்புக்கொண்டது. இந்த உயர்வு 3 கட்டங்களாக செயல்படுத்தப்படும். முதல் ஆண்டில் 15 சதவீதமும், இரண்டாம் ஆண்டில் 2.5 சதவீதமும், மூன்றாம் ஆண்டில் 5 சதவீதமும் வழங்க முடிவு செய்யப்பட்டது.

தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை, தெலுங்கு திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு, தெலுங்கானா மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத் தலைவர் தில் ராஜு மற்றும் கூடுதல் தொழிலாளர் ஆணையர் கங்காதர் ஆகியோர் ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து, 18 நாட்களாக நடைபெறாமல் இருந்த படப்பிடிப்பு நேற்று மீண்டும் தொடங்கியது. இதற்கிடையில், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உதவிய முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு நடிகர் சிரஞ்சீவி நன்றி தெரிவித்துள்ளார்.