சென்னை: இன்னொரு ஃபுல் சொல்லு என்ற பாட்டல் ராதா படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் “பாட்டல் ராதா.” பா. ரஞ்சித்-இன் உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள பாட்டல் ராதா திரைப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில் குரு சோமசுந்தரம் , பாரி இளவழகன், மாறன் மற்றும் சிலர் பாரில் உட்கார்ந்து குடித்துக் கொண்டு இருக்கின்றனர். மிகவும் நகைச்சுவையாக இந்த காட்சி அமைந்துள்ளது.