மலையாளத்தில் டிசம்பர் 20-ம் தேதி வெளியான படம் ‘மார்கோ’. படத்தின் ரத்தம் சிந்தும் சண்டைக் காட்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் 5 நாட்களில் 50 கோடி வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஹனீப் அடினி இயக்கத்தில், உன்னி முகுந்தன் நடித்துள்ள இந்தப் படத்தை ஷெரீப் முகமது தயாரித்துள்ளார். சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக வெளியாகியுள்ளது. இதற்கு சென்சார் அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். சுமார் 30 கோடி ரூபாய் செலவில் இப்படம் உருவாகியுள்ளது.
தற்போது 55 கோடி வசூல் செய்துள்ளதால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. அதுமட்டுமின்றி மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் தெலுங்கிலும் டப் செய்து வெளியிட உள்ளனர். மற்ற மொழி ரீமேக் உரிமைக்கான பேச்சுவார்த்தையும் தொடங்கியுள்ளது.