படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மகன் நந்தமுரி மோக்ஷக்னா ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தை பிரசாந்த் வர்மா இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் இருந்து பிரசாந்த் வர்மா விலகிவிட்டதாகவும், அவருக்குப் பதிலாக நாக் அஸ்வின் இயக்கப் போவதாகவும் சில நாட்களாகத் தகவல் வந்தது.
இதற்கு படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். அதில், “எங்கள் படம் தொடர்பாக சில ஆதாரமற்ற வதந்திகள் பரவி வருகின்றன. அவை உண்மையல்ல என்று உறுதியளிக்கிறோம். சரியான நேரத்தில் எங்களது திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவோம்” என்று கூறியுள்ளனர். மேலும் இப்படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்பு நடைபெறுவதாக இருந்தது.

நந்தமுரி மோக்ஷக்னாவின் உடல் நலக்குறைவால் அது தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை லெஜண்ட் புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ்எல்வி சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளது.