சென்னை: சரத்குமார் நடிக்கும் புதிய படம் “ஏழாம் இரவில்”: டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சரத் குமாரின் 150-வது படமான ஸ்மைல் மேன் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு சரத்குமார் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படத்திற்கு ஏழாம் இரவில் எனப் பெயரிடப்பட்டுள்ளது, அகில் எம்.போஸ் இப்படத்தை இயக்குகிறார். மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.
படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.