சென்னை : டிராகன்ஸ் படத்தில் 4 தனித்துவமான இயக்குநர்கள் இயக்குது மறக்க முடியாத நிகழ்வு என்று இயக்குனர் அஸ்வத் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த 4 தனித்துவமான இயக்குநர்களை இயக்கியது மறக்க முடியாதது என இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ந்துள்ளார்.
‘டிராகன்’ படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த போட்டோவை பகிர்ந்த அவர், நினைவில் கொள்ளவேண்டிய தருணம் என்று குறிப்பிட்டுள்ளார். அதில், இயக்குநர்கள் KS ரவிக்குமார், கௌதம் மேனன், மிஸ்கின், பிரதீப் ஆகியோர் உடன் அஸ்வத்தும் இருக்கிறார்.
இயக்குனர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம் விமர்சனம் மற்றும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் சமூக ஆதரவை அளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.