தமிழ் சினிமாவில் நல்ல இசை இல்லை, நல்ல பாடகர்கள் இல்லை என்று பழம்பெரும் பாடகி பி சுசீலா வேதனையுடன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தமிழ் சினிமாவில் நல்ல இசை இல்லை, நல்ல பாடகர்கள் இல்லை, கோடம்பாக்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது. இதைப் பார்ப்பது கடினம் என்றார் பி சுசீலா. அந்தக் காலப் பாடல்கள் எப்போதுமே அப்படி வருவதில்லை என்றும், எம்.எஸ்.விஸ்வநாதனும், கே.வி.மகாதேவனும் இசையமைப்பாளராக இருந்தபோது, ஸ்டுடியோவிற்குள் நுழையும் போது, பாடல் மட்டுமே கேட்கும் என்றும், இப்போது அப்படி இல்லை என்றும் பாடகி பி.சுசீலா கூறினார்.
தற்போதைய பாடல்கள் சத்தம் மட்டுமே, அர்த்தமுள்ள பாடல் வரிகளோ, இனிய இசையோ இல்லை என ரசிகர்கள் பலரும் குறை கூறி வரும் நிலையில், ஏறக்குறைய அதே கருத்தை பி சுசீலாவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சுசீலாவின் கருத்தைத் தொடர்ந்து தற்போதைய இசையமைப்பாளர்கள் தங்கள் பாணியை மாற்றிக்கொள்வார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.