சென்னை: திருமணம் முறிவுக்கு சினிமா காரணம் அல்ல என்று நடிகை அம்பிகா தெரிவித்துள்ளார்.
1980 கால கட்டங்களில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் அம்பிகா. ஒரே காலகட்டத்தில் சகோதரிகளான அம்பிகாவும் ராதாவும் முன்னணி கதாநாயகிகளாக ஜொலித்து வந்தனர்.
திருமணம் ஆன பின் இருவருக்கும் சினிமாவில் இடைவெளி ஏற்பட்டது. இந்நிலையில் அம்பிகா கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றார். இதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் அம்பிகா சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் திருமணம் முறிவு குறித்து அவர் அளித்த பேட்டியில், எந்தத் துறையில் இருந்தாலும் 2 பேருக்கும் செட் ஆகவில்லை என்றால் அது முறிந்து விடும். எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் பிரிய வேண்டும் என்றால் பிரிந்துதான் ஆக வேண்டும். அரசியலில் இருக்கும் 2 பேர் பிரிந்தால் அரசியல் காரணம் அல்ல. அதேபோல் சினிமாவும் காரணமில்லை. என்னை நல்லவள் என்று சொல்வதால் நான் நல்லவளாகிவிட மாட்டேன். கெட்டவள் என சொல்வதால் கெட்டவளாகிவிட மாட்டேன். வீட்டில் பிரச்சனை இருப்பவர்கள் கெட்டதை பேசுவார்கள் என்றார்.