அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இதை அட்லீ, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் முரத் கேதானி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
‘பேபி ஜான்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அட்லீயிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய கலீஸ் இயக்குகிறார். வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா காபி, ஜாக்கி ஷெராஃப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் டிசம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சல்மான் கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இவரும் வருண் தவானும் நடித்த காட்சியை அட்லீ இயக்கினார்.
இதன் படப்பிடிப்பு கடந்த வாரம் மும்பையில் நடந்தது. இந்த காட்சி படத்தின் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. அட்லியின் அடுத்த படத்தில் சல்மான் கான் நடிப்பது உறுதியாகியுள்ளது.
அதனால் அவர் தயாரித்த படத்தில் சிறிய காட்சியில் நடித்துள்ளார். இதற்காக சல்மான் கான் சம்பளம் எதுவும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.