அஜித் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், தொடர்ந்து நல்ல வியாபாரம் செய்து வருவதால், தமிழக பாக்ஸ் ஆபிஸில் பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்து சாதனைகளையும் முறியடித்து, தற்போது தமிழகத்தில் அஜித்தின் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளது.

தமிழகத்தில் அஜித்தின் படங்களிலேயே ‘விஸ்வாசம்’ படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதலிடத்தைப் பிடித்தது. தற்போது அதன் வசூல் சாதனையை ‘குட் பேட் அக்லி’ பாக்ஸ் ஆபிஸ் வசூல் முறியடித்துள்ளது. தமிழகத்தில் இதன் மொத்த வசூல் ரூ. 140 கோடி. அதன் பங்கின் விலை ரூ. 65 கோடி. இந்த வசூல் வெற்றியால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், சிம்ரன், த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் தமிழக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வாங்கியுள்ளது.