சென்னை: தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் மிக்பெரிய அளவில் வெற்றி பெற்று, கலேக்ஷனை அள்ளிய போதும் இந்த படம் குறித்து சில விமர்சனங்கள் எழுந்தால், தான் அடுத்து இயக்க இருக்கும் கூலி படத்தில், முந்தையாக தவறுகளை திருத்திக்கொண்டு, பக்காவான படமாக வெளியிடுவேன் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் பெற்று பெற்றது. சூப்பர் ஸ்டார் சர்ச்சை இணையத்தில் பேசுபொருளாக இருந்த நிலையில், இந்த படத்தில் இடம் பெற்ற டைர்கா குக்கும் பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. ரஜினியின் ஸ்டைல், லுக், தமன்னாவின் ஆட்டம் என ஜெயிலர் படம் மாஸ்காட்டிவிட்டது. இந்த படத்தை தொடர்ந்து த.ச.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதில் சூப்பர் ஸ்டாருடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படம் அக்டோபர் 10 ஆம் தேதிஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாக உள்ளார்.
வேட்டையன் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தில் சத்யராஜ்,ஸ்ருதி ஹாசன் ஆகியோர் கமிட்டாகி உள்ளனர். மிஸ்டர் பரத் படத்திற்கு பிறகு ரஜினி, சத்யராஜ் இப்படத்தில் இணைந்துள்ளனர். பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ரன்வீர் கபூர் மற்றம் பகத் பாசில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக பகத் பாசில் இந்த படத்தில் கமிட்டாகவில்லை.
தங்க கடத்தலை மையமாக கொண்டு உருவாக உள்ள இந்த படத்தில், ரஜினிகாந்த் நெகடிப் ரோலில் நடிக்க இருப்பதாகவும், முந்தை படத்தில் இருப்பது போல சரக்கு,கஞ்சா இதெல்லாம் சுத்தமாக இருக்காது. கடந்த காலத்தில் ரஜினி நடித்த பல சூப்பர் ஹிட் படங்கள் போல, இந்த படத்திலும், ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்து ஒரு மாஸ் என்டர்டெயிமெண்ட் படமாக, பக்கா ரஜினி சார் படமாக இருக்கும். பழைய தவறுகளை திருத்திக்கொண்டு ஒரு பக்கா படமாக இப்படம் கொடுப்பேன் என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படத்தில் சரக்கு, கஞ்சா பிரதானமாக இருந்த நிலையில், லோகேஷின் படம் என்றாலே அதில் போதை வஸ்து இருக்கும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதை முறியடிக்கும் வகையில் கூலி படத்தின் கதைக்களம் இருக்கும் என்று லோகேஷ் இவ்வாறு கூறி இருப்பது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.கமலை வைத்து லோகேஷ் விக்ரம் என மிகப் பெரிய ஒரு வெற்றி படத்தை கொடுத்த நிலையில் ரஜினிக்கும் அதே அளவு ஒரு வெற்றியை கொடுப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள் .