பிப்ரவரி மாதத்தில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அஜித் நடிப்பில் வந்த ‘விடாமுயற்சி’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதனைத் தொடர்ந்து, ஏகே ரசிகர்களுக்கு உண்மையான திரை விருந்தாக கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ‘குட் பேட் அக்லி’ திரையரங்குகளில் வெளியாகியது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இப்படம் அஜித் ரசிகர்களிடையே திருவிழாவை போல் கொண்டாடப்பட்டது.

படம் வெளியாகிய சில நாட்களிலேயே வசூலில் வெற்றிகரமாக சாதனை படைத்து, பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறியது. மாஸ் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லை என ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இப்படத்தில் அஜித்துடன் அர்ஜுன் தாஸ், திரிஷா, பிரசன்னா, யோகி பாபு, சுனில், பிரபு, பிரியா வாரியர், மற்றும் கெஸ்ட் ரோலாக சிம்ரன் நடித்திருந்தனர். சிம்பிளான வாழ்க்கையை விரும்பும் ஒரு டான் தனது குடும்பத்தை காப்பாற்ற மீண்டும் வன்முறைக்கு மாறும் கதையம்சம் ரசிகர்களை மோசமாக கவர்ந்தது.
ஆதிக், ஒரு தீவிர ஏகே ரசிகராகவே இப்படத்தை இயக்கியிருப்பது திரையில் தெளிவாக தெரிகிறது. அஜித்தின் பழைய படங்களின் ரெபரன்ஸ், ஸ்டைலிஷ் ஆட்டிட்யூட், மற்றும் signature மாஸ் சின்கள் அனைத்தும் இப்படத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால், ஏகே ரசிகர்கள் உணர்ச்சிவெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றனர்.
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, தற்போது ‘குட் பேட் அக்லி’ ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் மே 8ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்கில் படம் பார்த்தவர்களும், பார்க்க முடியாதவர்களும் இப்போது வீடே திரையரங்காக மாற்ற தயாராகின்றனர்.
ஓடிடி தளத்தில் கூட இப்படம் ஒரே சந்தோஷத்தை தரும் என்பதில் ரசிகர்களுக்கு எந்த ஐயமும் இல்லை. ‘குட் பேட் அக்லி’ மூலம் அஜித் மீண்டும் ஒரு மாஸ் ஹீரோவாக திரைக்கு வந்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தும் இந்த ஓடிடி ரிலீஸ், ரசிகர்களின் மீண்டும் ஒரு கொண்டாட்டமாக அமைவதற்கே உரியது.