சென்னையைச் சேர்ந்த கமலேஷ், ‘ராட்சசி’ படத்தில் ஜோதிகாவிடம் “உங்களைப் பொண்ணு பார்க்க வரட்டா?” என்று க்யூட்டாக கேட்கும் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களின் மனதில் நிறைந்த சிறுவனாக அறிமுகமானவர். 2015-ல் பிறந்த கமலேஷ் சிறுவயதிலேயே நன்றாக பாடக்கூடியவர் என்பது தெரியாத விஷயமல்ல. ஜீ தமிழின் ‘சா ரி கா மா பா லில் சாம்ப்ஸ் சீசன் 2’ ஜூனியர் போட்டியில் கலந்து கொண்டு பலரது பாராட்டை பெற்றிருந்தார்.

‘ராட்சசி’ (2019) படத்தின் வெற்றிக்குப் பிறகு, சந்தானத்தின் ஜூனியராக ‘பிஸ்கோத்’ (2020) படத்திலும், ராம்போவின் சிறுவயது கதாபாத்திரத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ (2022) படத்திலும் நடித்தார். தற்போது, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தில் “முள்ளி” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள கமலேஷ், தனது சிறந்த நடிப்பால் அனைவரையும் கண்சிமிட்ட வைத்துள்ளார். இது இவருக்கு சமூக ஊடகங்களில் பெரும் புகழை ஏற்படுத்தியுள்ளது.
பல யூடியூப் சேனல்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இவரது பேட்டிகளை பிரதானமாக வெளியிட்டு வருகின்றன. சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், ‘ராட்சசி’ பட ஷூட்டிங்கின் போது சூர்யா நேரில் சென்று “என்ன என்னுடைய பொண்டாட்டியை சைட் அடிக்கிறியாமே?” என்று நகைச்சுவையாக கேட்ட சம்பவத்தை பகிர்ந்தார். அந்த நேரம் பயந்துவிட்டேன், பின்னர் அவர் சிரித்துவிட்டார் என கூறியுள்ளார் கமலேஷ்.
ஜோதிகா, கமலேஷின் பிறந்தநாளில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவருக்குமே பிரியாணி வழங்கியதாகவும், அவர் மிகவும் பாசமாக நடந்துகொள்கிறார் எனவும் தெரிவித்தார். மேலும், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பட ஷூட்டிங் முடிந்தபோது, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அவரிடம் நேரில் வந்து பேசியதாகவும், அவர்கள்தான் அவரது பள்ளி கட்டணங்களை ஏற்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வெற்றிக்குப் பிறகு கமலேஷ், விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் தனது முதல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதற்கு மேலாக, ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கும் ‘காஞ்சனா 4’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.