சென்னை : நடிகர் தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் டிரெய்லர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ (NEEK) என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இப்படத்திற்கு, ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், படத்தின் டிரெய்லர் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. இப்படம், பிப். 21ம் தேதி திரைக்கு வருகிறது.