சென்னை : நடிகர் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி’ அப்டேட் வெளியாகியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அஜித்துடன், த்ரிஷா, பிரசன்னா, பிரபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
ஏற்கெனவே, படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஏப்.10ல் வெளியாக உள்ள இப்படத்தில், ‘ரம்யா’ என்ற கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிப்பதாக படக்குழு வீடியோவை வெளியிட்டுள்ளது.