பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். இந்தியில் ‘ரங்கீலா’ சூப்பர் ஹிட்டானது.
தமிழில் கமல்ஹாசனுடன் இந்தியன், சாணக்யன் ஆகிய படங்களில் நடித்தார். மும்பையை சேர்ந்த இவர், தொழிலதிபரும் மாடலுமான மோசின் அக்தரை காதலித்து 2016-ல் திருமணம் செய்து கொண்டார்.
ஊர்மிளாவை விட மோசின் 10 வயது இளையவர். அரசியலில் ஆர்வம் கொண்ட ஊர்மிளா, 2019ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார். இந்நிலையில், மும்பை பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றத்தில் கணவரிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவர் மனு தாக்கல் செய்ததாகவும், இருவரும் ஒருமனதாக விவாகரத்து மனுவை தாக்கல் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.