சென்னை: வைகை புயல் வடிவேலு, தமிழ் சினிமாவின் காலத்துக்கேற்ற தனித்துவமான காமெடியன். சில ஆண்டுகளாக பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த அவர், தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”, “சந்திரமுகி 2”, “மாமன்னன்” ஆகிய படங்களில் நடித்து திரும்பிய வடிவேலுவுக்கு, “மாமன்னன்” திரைப்படம் மெகா ப்ளாக்பஸ்டராக அமைந்து, அவருக்கு சிறந்த பெயரையும் பாராட்டையும் பெற்றுத்தந்தது.
சூழல் இப்படியே இருந்து கொண்டிருக்க, திடீரென வடிவேலுவின் மகன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வடிவேலுவின் குடும்பம் குறித்து பொதுவாக அதிக தகவல்கள் வெளியாகாது. அவரது மகனை அவர் விரும்பி கேமரா முன் காட்டியதில்லை. ஏன், மகனின் திருமணத்திலும் வெகு சில புகைப்படங்களே வெளியானது. மிகவும் தனிப்பட்ட முறையில் குடும்பத்தை காக்கும் வடிவேலு, அவரது மகனை ஊடகங்கள் அறியாமல் வைத்துவந்தார்.
வடிவேலுவின் இரண்டாவது இன்னிங்ஸ்:
வடிவேலு, 1990களில் சினிமாவில் அறிமுகமானவர். ஆரம்பத்தில் கவுண்டமணி-செந்தில் கூட்டணியில் துணை நடிகராக நடித்தார். ஆனால், தன் உடல் மொழி, முகபாவனை, வசன Delivery ஆகியவற்றால் தனக்கே ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார். பின்னர் சோலோ காமெடியனாக வெற்றிகரமாக வளர்ந்தார். ஒருகட்டத்தில் அவர் இல்லாத படம் என்றே இல்லை. “சந்திரமுகி” படத்தில் ரஜினிகாந்த் ஒப்பந்தமானபோது கூட, இயக்குநர் பி.வாசு முதலில் வடிவேலுவின் கால்ஷீட்டை உறுதி செய்யும்படி கேட்டார்.
விஜயகாந்த்-வடிவேலு மோதல்:
வடிவேலுவின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது, அவரது வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. விஜயகாந்த் மற்றும் வடிவேலு இடையே ஏற்பட்ட அரசியல் மோதல், அவரை சினிமாவில் இருந்து ஒதுக்க வைத்தது. திமுகவின் மேடையில் ஏறி விஜயகாந்தை விமர்சித்ததால், சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும், வடிவேலுவின் காமெடி வீடியோக்கள் தொலைக்காட்சி சேனல்களில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன.
“மாமன்னன்” மூலம் மீண்டும் பீக்:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வடிவேலு “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” மூலம் திரும்பினார். ஆனால் அந்த படம் தோல்வி அடைந்தது. தொடர்ந்து நடித்த “சந்திரமுகி 2” படமும் எதிர்பார்த்த அளவுக்கு கிளிக்காகவில்லை. ஆனால் “மாமன்னன்” படம் அவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. மாரி செல்வராஜ் இயக்கிய இப்படம், வடிவேலுவிற்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது.
விரைவில் வெளியாவது:
வடிவேலு தற்போது “மாரீசன்” மற்றும் “கேங்கர்ஸ்” போன்ற படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக “கேங்கர்ஸ்” படம் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. ஏனெனில், பல வருடங்களுக்கு பிறகு, சுந்தர்.சி மற்றும் வடிவேலு மீண்டும் இணைகிறார்கள். இதற்கு முன்பு இந்த கூட்டணியில் வெளியான “வின்னர்”, “கிரி”, “தலைநகரம்”, “நகரம்” போன்ற படங்கள் சூப்பர் ஹிட்டானது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
வெளியான புகைப்படம்:
இந்நிலையில், வடிவேலுவின் மகன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வடிவேலுவைப் போலவே அவரது மகனும் எளிமையான தோற்றத்துடன் இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. புகைப்படம் வெளியானதுமே, ரசிகர்கள் “அவரும் தந்தையை போலவே ஹாஸ்ய பூர்வமாக இருப்பாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வடிவேலுவின் மகன்:
வடிவேலுவின் மகன் சினிமாவில் அறிமுகமாக இருப்பாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஆனால் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.