சென்னை: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கில் இயக்குனர் பாலா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வணங்கான் என்ற தலைப்பு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி சங்கத்தில் 2020-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மனுதாரர் தாக்கல் செய்தார்.
‘வணங்கான்‘ தலைப்பை பயன்படுத்த தடை விதிக்க மறுத்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தயாரிப்பாளர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இயக்குனர் பாலா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமட்ஷி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.