சென்னை: தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சினிமா மூலம் பிரபலமான வாணி போஜன், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று தன்னைப் பற்றிய ட்ரோல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்படுவது குறித்து மிகுந்த வேதனையுடன் பேசினார். அது வருமாறு:-
நடிகர்களுடன் சேர்த்து சமூக வலைதளங்களில் சிலர் ஆபாசமான வதந்திகளையும், கிசுகிசுக்களையும் பரப்புவது வேதனை அளிக்கிறது. நாங்க நடிக்க வந்திருக்கோம், இதை எதிர்கொள்ள விட்டுவிடுகிறேன். என்னுடன் நடிக்கும் சிலருடன் நான் நட்பாக பழகினால் அல்லது அவர்களுடன் வெளியில் சென்றால், அவர்கள் உடனடியாக அதைப் பற்றி மோசமாகப் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
எனக்கு பக்கத்தில் நின்றிருந்த ஒரு புகைப்படக் கலைஞரைப் பற்றிப் பேசினார்கள். அப்போது அவருக்கும் எனக்கும் திருமணம் ஆகிவிட்டதாக கூறினார்கள். இன்ஸ்டாகிராமில் தினமும் நான் பதிவிடும் புகைப்படங்களை சிலர் பதிவிட்டு, ‘உடைகளை குறைத்துக் கொள்ள அதிக வாய்ப்புகள் கிடைக்கும்’ என்று தவறான கமெண்ட் போடுகிறார்கள்.
என்னை சினிமா நடிகையாக்க பல்வேறு புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறேன். உடனே, அந்தப் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வைரலாக்குவதையே முழு நேர வேலையாகக் கொள்கிறார்கள். நீங்கள் ஒருவரை ட்ரோல் செய்யலாம். எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. பொதுவாக நடிகர்களுக்கு இது நடக்காது. நடிகைகள் மட்டுமே இப்படி ட்ரோல் செய்யப்படுகிறார்கள். டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்த என்னிடம், ‘சீரியலில் வந்தவரால் எல்லாம் நடிக்க முடியாது’ என்று பலர் கூறியுள்ளனர்.