
விஜய் குறித்து வனிதா விஜயகுமார் வெளியிட்ட கருத்துகள் தற்போது பெரும் கவனம் பெற்றுள்ளன. விஜயின் ரசிகையாகவும், அவருடன் தனது முதல் படம் சந்திரலேகாவில் நடித்த நடிகையாகவும் இருக்கும் வனிதா, தற்போது விஜய் அரசியலுக்கு செல்வது குறித்து தனது எண்ணங்களை பகிர்ந்துள்ளார். நடிகராக, மனிதராக விஜய் மீது தனக்குள்ள மரியாதை என்றும், நம்பிக்கையும் என்றும் தெரிவித்துள்ள வனிதா, “விஜய் நிச்சயம் ஊழல் செய்ய மாட்டார்” என உறுதியாக கூறியுள்ளார்.

விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததில் தான் சற்றே பதற்றமாக இருந்ததாகவும், அவர் நடிப்பை இனி திரையில் பார்க்க முடியாது என்பதே தான் ஒரு ரசிகையாக வருத்தமளிக்கிறது என தெரிவித்துள்ளார். அவரின் வளர்ச்சி, அவரது பதில் பொறுப்பும் தனக்கே ஆச்சரியமளிக்கின்றன என கூறிய வனிதா, விஜய் மிகவும் பொறுப்புள்ள முடிவை எடுத்துள்ளார் என்றும் நினைப்பதாக கூறுகிறார்.
இன்றைக்கும் விஜய் மீது எப்போதும் நம்பிக்கை இருக்கிறது என கூறும் வனிதா, “அவர் தன் வாழ்க்கையில் இருந்த அனைத்தையும் துறந்து, மக்கள் நலனுக்காக அரசியலுக்கு வந்தவர். அவரிடம் நேர்மை இருக்கிறது. அவர் ஒருபோதும் மக்களை ஏமாற்ற மாட்டார், ஊழல் செய்ய மாட்டார்” என வலியுறுத்தினார்.
விஜய் தன் சினிமா கெரியர் உச்சத்தில் இருக்கும் போதே அரசியலுக்கு வந்திருப்பது பெரும் உந்துதலாக இருக்கிறது. பணமும் புகழும் இருந்த நிலையிலேயே சினிமாவை விட்டு சமூக சேவையை தேர்ந்தெடுத்திருக்கிறார். இது தான் அவரது விசுவாசமான ரசிகர்களை பெருமைப்பட வைத்திருக்கும் முக்கிய காரணம்.
வனிதா கூறிய இந்த வார்த்தைகள், விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அவரின் நேர்மையை ஆதரிக்கும் விதமாக, “அக்கா நீங்க சொன்னது உண்மைதான், நாங்க நம்புறோம்” என சமூக வலைதளங்களில் பாராட்டுகிறார்கள்.
விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள கடைசி படம் ஜனநாயகன். ஹெச். வினோத் இயக்கும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. விஜய் திரையில் இறங்கும் கடைசி நேரத்தில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் அந்த அனுபவத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.