தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், தனது திறமையான நடிப்பால் திரையுலகில் தனித்து நின்றார். அதேபோல்… விஜய், தனுஷ் போன்ற நடிகர்கள் எதிர்கொண்ட பாடி ஷேமிங் சர்ச்சையில் சிக்கி, பின்னர் நடிப்புக்கு திறமை மட்டும் போதும் என்று நிரூபித்துள்ளனர்.
காதல், பாய்ஸ் போன்ற தமிழ் படங்களில் நடிக்க வரலட்சுமிக்கு வாய்ப்பு வந்தபோது, தன் தந்தையின் வார்த்தைகளை மதித்து நடிக்க மறுத்துவிட்டார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘போடா போடி’ படத்தில் நடித்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.
முதல் படத்தின் தோல்வியால் துவண்ட வரலட்சுமிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடிகர் சரத்குமார் பல ஹீரோயின்களுக்கு சிபாரிசு செய்து வாய்ப்பு கொடுத்தாலும் மகளுக்கு எதுவும் செய்யவில்லை. ஒருமுறை மேடையில் பேசும்போது இப்படிச் சொல்லி வருத்தப்பட்டார். வரலட்சுமி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் அப்பா வாய்ப்பு தருவார் என்று காத்திருக்காமல் நடித்தார்.
பின்னர் இயக்குனர் பாலாவிடம் நடிகை சங்கீதா, வரலட்சுமி பற்றி கூறி அவருக்கு தாரைதப்பட்டை பட வாய்ப்பை பெற்று தந்தார். இப்படத்தில் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய வரு, இப்படத்தின் மூலம் கதாநாயகி என்ற முத்திரையை உடைத்து வில்லி, குணச்சித்திர நடிகையாக வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். அவரது நடிப்பு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
சினிமா கேரியரில் பிசியாக இருந்த வரு, நடிகர் விஷாலை காதலித்து வந்தார்… அதை உறுதிப்படுத்தும் வகையில் அவருடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆனால் நடிகர் சங்க பிரச்சனையால் விஷால் – சரத்குமார் இடையே ஏற்பட்ட பிரச்சனை இவர்களின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. வரலட்சுமி காதலில் உறுதியாக இருந்தாலும், பிரியும் முடிவை எடுத்தது விஷால்தான் என்று கூறப்படுகிறது.
பிரிந்த பிறகு திருமணம் செய்து கொள்ள விரும்பாத வரலட்சுமி, இந்த ஆண்டு நிச்சயதார்த்த புகைப்படத்துடன் தனது நீண்ட நாள் நண்பரான நிகோலாயை காதலிப்பதாக அறிவித்து, ஜூலை 3ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.சென்னையில் நடந்த இவர்களது திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் தற்போது தேனிலவு நாட்களை கொண்டாடி வரும் வரலட்சுமியின் திருமண செலவு குறித்து சரத்குமார் பேசினார்.
அதன்படி, வரலட்சுமி தனது திருமணத்திற்கு 800 கோடி செலவு செய்ததாக யூடியூப் தளங்களில் செய்திகள் உலா வருகின்றன. ஆனால், அந்த 800 கோடி எங்கே என்று கூட தெரியவில்லை’’ என்கிறார் சரத்குமார். காரணம், அவருடைய மொத்த சொத்து ரூ.200 முதல் 300 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து பேசிய சரத்குமார் 69 வயதிலும், நான் 35 வயது போல் இருக்கிறேன். நான் வலுவாக இருப்பதற்கு சுத்தமான பழக்கவழக்கங்களே காரணம். ஆனால் தற்போதைய இளம் தலைமுறையினர் போதை, மது, கஞ்சா போன்றவற்றுக்கு அடிமையாகி வருகின்றனர் என பல விடயங்களை அவர் பிரச்சாரத்தில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.