சென்னை: வாரிசு படத்தால் நஷ்டம் என்று தயாரிப்பாளர் ஓப்பனாக தெரிவித்துள்ளார்;.
கடந்த 2023ல் பொங்கல் பண்டிகைக்கு துணிவு மற்றும் வாரிசு படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதில் தளபதி விஜய் நடித்து வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவான வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இப்படத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில், தயாரிப்பாளரும், நடிகரும், இயக்குநருமான சித்ரா லக்ஷ்மன், வாரிசு படம் நஷ்டம் என்பது குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, “வாரிசு படத்தால் தனக்கு நஷ்டம் என சமீபத்திய பேட்டியில் தில் ராஜு ஒப்புக்கொண்டார். கேம் சேஞ்சர் படம் தங்களுக்கு கம் பேக் என கூறியிருக்கிறார். வசூல் விவரங்களை பேசி பேசியே கெடுத்துவிட்டார்களோ என எனக்கு தோன்றுகிறது” என அவர் கூறியுள்ளார்.
கேம் சேஞ்சர் படத்தின் ப்ரோமோஷன் Interview-ல் தயாரிப்பாளர் தில் ராஜு வாரிசு படம் குறித்து பேசியதை சுட்டிக்காட்டி சித்ரா லக்ஷ்மன் இதனை கூறியுள்ளார். இதன்மூலம் வாரிசு படம் நஷ்டம் என்பதும் உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.