பாரீஸ்: நடிகர்கள் வருண் தவானும் ஜான்வி கபூரும் இணைந்து நடித்த பவால் படம் மூலம் சிறந்த நட்பு உருவாகியது. தற்போது Sunny Sanskari Ki Tulsi Kumari படத்திலும் இவர்கள் இருவரும் மீண்டும் ஜோடியாக நடித்துள்ளனர். அந்தப் படத்தின் ப்ரமோஷனில் கலந்து கொண்டபோது, ஜான்வி கபூர் ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். பாரீஸ் ஷூட்டிங்கில் வருண் தவான் தன்னை தரையில் தூங்க வைத்ததாக அவர் சிரித்தபடி கூறியுள்ளார்.

ஜான்வி கூறுகையில், “பவால் ஷூட்டிங் போது லவுஞ்சில் தங்கியிருந்தோம். சோபாவில் இடம் இல்லாததால், நானும் வருணும் தரையில் படுத்தோம். சிறிது நேரத்தில் இடம் காலியானது. ஆனால் வருண் சோபாவுக்கு சென்று படுத்துக்கொண்டார், எனக்கு சொல்லவே இல்லை,” என்றார். இதை கேட்ட வருண் தவான், “அவளை எழுப்பி தூக்கத்தை கெடுக்க மனமில்லை. எழுப்பியிருந்தால் கோபப்படுவாள் என்பதால் அப்படியே விட்டேன்,” என்று விளக்கம் அளித்தார்.
இதை தொடர்ந்து ஜான்வி நகைச்சுவையாக, “அதற்காக விமானத்தில் பயணம் செய்தபோது வருணுக்கு டிரக் கொடுத்ததாகச் சொல்கிறார். ஆனால் அது வெறும் தூக்க மாத்திரைதான்,” என்று கூறினார். இவர்களுக்குள் நட்பும், நகைச்சுவையும் கலந்த அந்த தருணங்கள் ரசிகர்களுக்கு சிரிப்பைத் தந்துள்ளன.
ஜான்வி மேலும் கூறியதாவது, “வருணின் ஆற்றல் என் அம்மா ஸ்ரீதேவியையும் வியக்க வைத்தது. அவர் நடித்த ஜுத்வா 2 படத்திற்காக, என் அம்மா நடித்த சால்பாஸ் படத்தை பலமுறை பார்த்தாராம். அவருக்கு கோவிந்தாவின் காமெடி டைமிங் மிகவும் பிடித்தது,” என்று தெரிவித்தார். வருண் மற்றும் ஜான்வி நடித்த Sunny Sanskari Ki Tulsi Kumari படம் தற்போது கலவையான விமர்சனங்களுடன் நல்ல வசூலைப் பெற்று வருகிறது.