சென்னை: வீராங்கனை வேலுநாச்சியாரின் திரைப்படம் லண்டனில் அடுத்த மாதம் தொடங்குகிறது. அடுத்த வருடம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் வரலாற்றை மையமாக வைத்து ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ என்ற திரைப்படம் உருவாகிறது.
டிரண்ட்ஸ் சினிமாஸ் சார்பில் ஜெ.எம்.பஷீர் தயாரிக்கும் இந்தப்படத்தை ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். வேலுநாச்சியாராக அறிமுக நடிகை ஆயிஷா நடிக்கிறார். முக்கிய பாத்திரமான பெரிய மருதாக ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இப்படத்தின் மோஷன் பிக்சர் டீஸர், வேலுநாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதன் படப்பிடிப்பு லண்டனில் அடுத்த மாதம் தொடங்குகிறது. அடுத்த வருடம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.