விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் வெளியான “கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரூ. 430 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதையடுத்து விஜய் எச்.வினோத் இயக்கும் கடைசி படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
KVN புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் அனிருத் இசையமைத்துள்ளது மற்றும் அக்டோபர் 2025 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. புதிய தகவலின் படி இப்படம் விவசாய பிரச்சனைகளை மையமாக வைத்து அரசியல் கதையாக உருவாகவுள்ளது.
அரசியலுக்கு வந்த பிறகு விஜய் தனது முதல் மாநாட்டை விழுப்புரத்தில் நடத்தவுள்ளார். மாநாடு முடிந்ததும் அவர் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.