விஜய்யின் 69-வது படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இதில் இந்தி நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே நாராயணா தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில் ஹிட்டான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் இது என்று கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்க்கு இதுவே கடைசி படம் என்று கூறப்படுகிறது. அதனால், அதற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ‘ஜன நாயகன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. வைரலாகும் ‘ஜன நாயகன்’ போஸ்டர்.