விஜய் ஆண்டனி தற்போது 25 படங்களில் நடித்து முடித்துள்ளார். இவர் நடித்த ‘ககன மார்க்கன்’, ‘சக்தி திருமகன்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. விஜய் ஆண்டனி நடிக்கும் 25-வது படம் ‘சக்தி திருமகன்’. இந்நிலையில் விஜய் ஆண்டனி தனது 26-வது படத்தின் இயக்குனரை முடிவு செய்துள்ளார்.

‘ஜென்டில்வுமன்’ இயக்குனர் ஜோஷ்வா சேதுராமன் இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் பட பூஜையுடன் தொடங்கவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ‘ஜென்டில்வுமன்’ திரைப்படம் மார்ச் 7-ம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது.
லிஜோ மோல் ஜோஸ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையில் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.