விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். இருவரின் நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் நடந்தது. இருவரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்தத் தகவல் தெலுங்கு ஊடகங்களில் வெளியாகியுள்ளது. விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா முதன்முதலில் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் இணைந்து நடித்தனர். அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பிறகு, இருவரும் முன்னணி நடிகர்களானார்கள். குறிப்பாக ரஷ்மிகாவின் பல படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அவர் இப்போது இந்தியத் திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக உள்ளார்.

இருவரும் தங்கள் வேலைகளுக்கு இடையிலான ஓய்வு நேரத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வது வழக்கம். இப்போது, விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புதிய படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். தில் ராஜு தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்.
திருமணத்திற்குப் பிறகும் ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து நடிப்பார் என்று தெரிகிறது. பல்வேறு படங்களில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.