சூர்யாவின் நந்தா திரைப்படத்தை பார்த்த நடிகர் விஜய், தயாரிப்பாளருக்கு தைரியம் கொடுத்து படம் ரிலீஸ் செய்ய சொல்லியுள்ளார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.
2001ல் பாலா இயக்கத்தில் வெளியான நந்தா படம், சூர்யாவின் திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. தயாரிப்பாளர் கணேஷ் ரகு, படத்தின் பட்ஜெட் அதிகமாகிவிட்டதால் எதிர்பார்த்ததை விட குறைவான விலையில் விநியோகஸ்தர்கள் வாங்க விரும்பியதை சமாளிக்க விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகரை அழைத்து படத்தை காட்டினார்.

படத்தை பார்த்த பிறகு விஜய் கூறியது: “சூப்பரா இருக்கு சார், நல்ல வந்துருக்கு, கண்டிப்பா வெற்றிபெறும். தைரியமா நீங்களே ரிலீஸ் பண்ணுங்க.” இதற்கு அப்போதைய எஸ்.ஏ சந்திரசேகரும் ஒத்துக் கொண்டார். அதன் பிறகு படம் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றியை பெற்றது.
விஜய் மற்றும் சூர்யா இருவரும் கல்லூரி காலத்தில் இருந்து நண்பர்கள். நந்தா படம் மூலம் சூர்யாவிற்கு திரைப்பயணத்தில் மாபெரும் திருப்புமுனை அமைந்தது. இதனோடு, பெரிய இயக்குனர்கள் அவரை கவனிக்கத் தொடங்கினர். பின்னர் காக்க காக்க, கஜினி, வேல், வாரணம் ஆயிரம் போன்ற வெற்றிகளை தொடர்ந்து குவித்தார் சூர்யா.