‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தமிழில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாகும். 2017 முதல் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும், ஆரவ், ரித்விகா, முகேன் ராவ், அரி அர்ஜுனன், ராஜு ஜெயமோகன், அசீம், அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் பலர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
7 சீசன்களாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், அரசியல் மற்றும் சினிமாவில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பிறகு, கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரது வித்தியாசமான அணுகுமுறை பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த சூழ்நிலையில், விரைவில் தொடங்கும் 9வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என்று ஜியோஹாட்ஸ்டார் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து ஜியோஸ்டார் தென்னிந்திய பிரிவு தலைவர் கிருஷ்ணன் குட்டி கூறுகையில், “இந்த முறை, சில சமூக ஊடக பிரபலங்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள்.
நெல்சன் மற்றும் ‘அமரன்’ இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி போன்ற பிரபல இயக்குனர்கள் இதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியை இயக்கியிருந்தாலும், இந்த சீசனை பிரவீன் மற்றும் அர்ஜுன் இயக்குவார்கள். கிருஷ்ணன் குட்டி மேலும், ஹாட்ஸ்டாரில் நிகழ்ச்சியைப் பார்க்கும் பார்வையாளர்கள் போட்டியாளர்கள் குறித்த தங்கள் கருத்துகளை நேரடியாகப் பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். வரவிருக்கும் ஒன்பதாவது சீசனையும் அவர் தொகுத்து வழங்குவார். இந்த நிகழ்ச்சி அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும்,” என்றார்.